Friday, August 29, 2008

[Tamil Poem] How to win?

நீ
வெற்றி பெற
தோல்வியை தோல்வியடைய
செய்!!

[Tamil Poem] Who is God ...

மனிதனுக்கு புலபடாத சக்திகளுக்கு
அவன் சூட்டிய பெயர் 'கடவுள்'

Monday, August 18, 2008

[Tamil Poem] - காதல் தோல்வி ...

யார் சொன்னது
திருடியவன் தான்
சிறையில் இருப்பான் என்று?

என் இதயத்தைத் திருடியவள்;
இன்று மாற்றான் மனைவி
நானோ தனிமைச் சிறையில்!!

[Tamil Poem] Nice feeling ...

நிலவின் ஒளி
கடல் அலைகளின் தாலாட்டு
அருகில் கவிதையாய் அவள்

Sunday, August 17, 2008

[Tamil Poem] - Love, Caste....

பெண்ணே
நீ
எம்மதம் ஆயினும்
உன்
சம்மதம் ஒன்றே போதும்!

[Tamil Poem] - Prison!

கவிதை 1:
பெண்ணே
சிறையில் இருக்க ஆசை
உன் இதயம் என்னும் சிறையில்
ஆயுள் கைதியாய்!!

----*********----
கவிதை 2:
பெண்ணே
என் இதய சிறையில்
ஆயுள் கைதியாய்
நீ

Thursday, August 14, 2008

[Tamil Poem] ஜாதி....

தந்தையுடன் பச்சிளம் குழந்தை
பள்ளிக்குச் சென்றது சேர்வதற்காக

விண்ணப்பப் படிவம் கொடுக்கப் பட்டது
அதில் கேட்டிருந்த ஒரு கேள்வி 'உன் ஜாதி?'
தந்தை ஏதோ எழுத
புரியாமல் விழித்தது இந்த பிஞ்சு!
குழந்தை நினைத்தது 'ஜாதிக்' கேற்றபடி பாடங்கள் மாறுமென்று!!!

முதல் நாள் வகுப்பில்
ஆசிரியர் நடத்திய பாடம்
'ஜாதிகள் இல்லையடி பாப்பா ......'
பிஞ்சு மனம் இன்னும் குழம்பியது
இல்லாத ஜாதியை ஏன் நம்மிடம் கேட்டார்கள் முன்பு?

அந்த குழதையின் முதல் கேள்வி
'ஜாதி' கேற்றபடி பாடங்கள் மாறப் போவதில்லை
'ஜாதி' கேற்றபடி சொல்லிக் கொடுக்கும் ஒழுக்கங்கள் மாறப் போவதில்லை
பிறகு எதற்கு அந்த 'ஜாதி' நமக்கு?

குழம்பிய குழந்தை தெளிவாகச் சிந்திக்கிறது!
ஆனால் தெளிவாக இருப்பதாக கருதும் நாமோ ஜாதி வெறி பிடித்து அலைகிறோம்!!

தயவு செய்து,
ஜாதியை ஒழிப்போம்
இந்தியாவை மீட்போம்!

Wednesday, August 13, 2008

[Tamil Poem] கோபம்



குழந்தையின் சிரிப்பைப் பார்;
பூத்துகுலுங்கும் மலர்களைப் பார்;
கடல் அலைகளின் அழகைப் பார்;
துள்ளி ஓடும் உன் செல்லப் பிராணியைப் பார்;
அப்படியும் உன் கோபம் தணியவில்லை என்றால்
நீ மனிதனாய் என்று யோசித்துப் பார்;

[Tamil Poem] Effort / Hardwork

உழைப்பு
அதிர்ஷ்டம் என்பதை மறந்துவிட்டால்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
உழைப்பின் அளவே
வித்தியாசம்!

[Tamil Poem] Abhinav Bhindra won Gold medal in Olympics

News: In Olympics 2008, Abhinav Bhindra of Chandigarh has created history by winning the individual Gold medal for India in Shooting
News: People are rushing towards the Gold store as Gold rate is dipping for past 2 weeks!

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
இந்த செய்தியை சீனாவில் இருந்த
"அபினவிடம்" சொல்லிவிட்டார்களோ?

Tuesday, August 12, 2008

[Tamil Poem] Loss of Mother ....

தாயின் பிரிவு!
இனி
இழப்பதற்கு
ஒன்றும் இல்லை
இந்த உலகில்!

[Tamil Poem] Pain ...

வலி
உணர்தேன் அந்த உணர்வை
நான் நண்பனாய் கருதியவன்
என்னை எதிரியாய் பார்த்த பொழுது!!

Friday, August 8, 2008

ஐ.டி. (தகவல் தொழில்நுட்ப) துறையில் பணி புரிபவன் நான். என்னைப் போன்றோருக்கு தாங்கள் தரும் அறிவுரை?

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.

உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது!

வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!

பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.

உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மனதைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். யோசியுங்கள்.

எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். கண்களிலும் கவனம் வையுங்கள்.

உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.

காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.

வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டுமானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.

வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சுவதற்கு- உணவு ஊட்டு வதற்கு அனுமதி கொடுங்கள்.

உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோ ரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.

-- I got this as a Forwarded mail. It claimed that its an extract from Vikatan. I am not sure on that. Since the advice is nice I have posted it here.

Rajinikanth - Kamal -- Nadigar Sangam - Media!!!

'பாபா' படம் வெளியாகும்போது படப்பெட்டியை அபகரித்து ஓடினர் சில தடியர்கள். அப்போது இந்த நடிகர் சங்கம் எங்கே இருந்தது?

ஆனால், அந்த சம்பவத்துக்கு காரணமான மனிதர் இன்று சிறையில் --( ரஜினி ஸ்டைல் கருத்து) ... 'போடா, அந்த ஆண்டவனே நம்ம பக்கம்...'

இந்த நடிகர் சங்கத்தலைவன் 'குசேலன்' ரிலீஸ் செய்யமுடியாமல் குண்டர்கள் தடுத்தபோது குரல் கொடுக்கவில்லை. ரஜினி வருத்தம் தெரிவித்ததும் வந்து அறிக்கை கொடுக்கிறான். இவன் எதற்கு 'தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவன்'..??

ஆக, நடிகர் சங்கம் ரஜினிகாந்திற்கு இதுவரை எந்த விதத்திலும் உதவவில்லை... ரஜினிக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உதவமாட்டார்களாம்... ஆனால், ரஜினி கையைக்கட்டிகொண்டு இருக்கவேண்டுமாம்...

அந்த வன்முறைக் கட்சி ரஜினி ரசிகர்களை குண்டர்கள் வைத்துத் தாக்கியது, அப்போது என்ன செய்தது இந்த நடிகர் சங்கம்...?? ஆனால், ரஜினி வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் தன் ரசிகர்களுக்காக குரல் கொடுத்தார்... அப்போது, ரஜினி 'வாய்ஸ்' எடுபடவில்லை என்று கேலி செய்தது இந்த 'மீடியா'... ஏ, முட்டாள் மீடியாவே, தலைவர் தன் ரசிகனுக்காக குரல் கொடுத்தார்... தான் வெற்றி பெற குரல் கொடுக்கவில்லை...

'குசேலன்' பட செலவை திருப்பி எடுக்க தமிழகமே போதும்... இது போக வெளிநாட்டு விநியோகம்... ஆனால், காசுக்காக ரஜினி வருத்தம் தெரிவித்ததாக புரளி கிளப்புகிறார்கள், இந்த முட்டாள்கள்...

ஆமாம், இவ்வளவு களேபரத்திலும் அமைதியாக இருக்கிறானே ஒரு 'நண்பன்'... அவன் உண்மையில் நண்பன்தானா? இவனைப் போய் படத்துக்கு படம் தூக்கிப்பிடிக்கிறாயே, தலைவா... முதுகில் குத்தும் ஜென்மங்களுக்கு இத்தனை இடம் தேவைதானா..? அவன் படத்துக்கு விளம்பரம் தேடமட்டும்தான் உன்னை நாடுகிறான்...

ரஜினியைப் பார்த்து விசிலடிப்பவர்கள் மட்டுமே ரசிகர்கள் அல்ல... எந்த பிரச்சினையிலும் கூட நிற்க வேண்டும்... நாங்கள் இருக்கிறோம் தலைவா... உன்னை தாங்கிபிடிக்க... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்...

சத்தியம் ஜெயிக்கும்...
-- ஓர் ரசிகனின் ஆதங்கம் source Rajinifans.com discussion forum

Thursday, August 7, 2008

[Tamil Poem] Hogenakkal, Cauvery issues - Tamil Nadu

புரிந்துகொள் மனிதா புரிந்துகொள்
இங்கு உள்ள காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும்
உனக்காக பலமாக ஆதரவு தரும்
அங்கே (கர்நாடக) அவர்கள் ஆட்சியில்லாத பொழுது!!!

Wednesday, August 6, 2008

Is this the start of LayOffs in India?

Hexaware plans to layoff 300 employees??? - http://www.siliconindia.com/shownews/45131
Virtusa!! - http://www.topix.com/business/software/2008/07/virtusa-corp-lowers-revenue-guidance?threadid=QC3M661SP6SGTKRM#comments

Monday, August 4, 2008

Few good hearts are still there in Tamil nadu!

கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டு சிலர் அவரைத் தாக்குவது தமிழனை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இது நமது பண்பல்ல.... நிஜமான நன்றி கெட்டத்தனம், என இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஒகேனக்கல் பிரச்சனையில் தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி கன்னடர்களுக்கெதிராக ஆவேசமாகப் பேசினார். இதைத் தொடர்ந்து அவரது குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என வன்முறையில் இறங்கினர்.

வன்முறையைத் தடுக்கவும், படம் எவ்விதக் குழப்பமுமில்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகவும் ரஜினிகாந்த் ஒரு விளக்கக் கடிதம் அனுப்பினார் கன்னட பிலிம்சேம்பருக்கு. ஆனால் இதை ஏற்க மறுத்தனர் கன்னட அமைப்பினர் சிலர்.

கன்னட பிலிம்சேம்பர் தலைவர் ஜெயமாலா மற்றும் ரஜினியின் நலம் விரும்பிகள் சிலர் கேட்டுக் கொண்டதால், தொலைக்காட்சியில் தோன்றி, தனது பேச்சுக்கு விளக்கம் தெரிவித்தார் ரஜினி.

அதில், ஒட்டு மொத்த கன்னடர்களையும் தான் தாக்கிப் பேசவில்லை என்றும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்குவோரையும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போரையும் உதைக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசியதை தவறாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வு தனக்கு மிகப்பெரிய பாடம் என்றும், இதனால் யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், குசேலன் திரைப்படம் எவ்விதப் பிரச்சினையுமின்றி வெளியாக ஒத்துழையுங்கள் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சத்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு, இளம் இயக்குநர்கள் அமீர், சீமான் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரஜினி உயர்ந்த மனிதர் -பாரதிராஜா

ரஜினிக்கும் எனக்கும் கருத்து மாறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதன், மனிதாபிமானத்தில் முதலிடத்தில் நிற்பவர் என்பதில் எந்த மாறுபாடும் கிடையாது.

இப்போது அவர் கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்துப் பேசியதை அவருடைய மனிதாபிமானத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன். சினிமாவின் நன்மைக்காகப் பேசிய ரஜினியைக் குறை கூறுவதோ கண்டித்துப் பேசுவதோ தேவையற்றது. அதற்கான தகுதியும் இங்கு யாருக்கும் கிடையாது.

நண்பர் ரஜினிகாந்த் எந்த நிலையிலும் மன்னிப்புக் கேட்கக்கூடியவர் அல்ல. எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் மனிதரும் அல்ல. இதை நான் அவருடன் பழகியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.

வருத்தம் தெரிவிப்பது மனித நேயத்தின் மிக உயர்ந்த பண்பு. நிஜத்திலும் நான் பார்த்த மிக உயரிய மனிதர்களுள் முதலிடத்தில் நிற்பவர் ரஜினி. அடித்த கரங்களுக்கே பூமாலை போடும் அளப்பரிய குணம் அவருக்கு மட்டுமே உண்டு.

எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளை வெற்றிகரமாக சந்தித்து வெளியில் வந்த வீரன் இந்த மனிதன். இந்தச் சூழ்நிலையையும் நேர்கொள்ளக்கூடிய சக்தி அவரிடம் உண்டு.

இதே ரஜினி உண்ணாவிரதத்தில் பேசிய அடுத்த நாளே அவரது கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. அப்போது மருந்துக்குக் கூட ஆதரித்துப் பேச ஒருவரும் முன்வரவில்லை.

சூப்பர்ஸ்டார் என்ற அவரது இமேஜூம், அவரது அதிகபட்ச சம்பளமும்தான் இங்குள்ள சிலருக்குப் பிரச்சினை என்றால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. அது 30 வருடங்கள் அவர் கஷ்டப்பட்டதன் விளைவு. மக்கள் கொடுத்தது. புரிந்து கொண்டு பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

சீமான்:

இப்ப அவர் என்ன சொல்லிட்டார்னு இவங்கல்லாம் குதிக்கிறாங்க... இந்த விளக்கத்தைக் கூட அவர் சொல்லாம விட்டிருக்கலாம். அதனால அவருக்கொண்ணும் நஷ்டமில்லை. ஆனா, இதனால ஒரு வன்முறை வெடிச்சி தியேட்டர்காரங்களும், அப்பாவி ரசிகர்களும், படத்தை விநியோகம் பண்ணியவர்களும் பாதிக்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே வருத்தம் தெரிவிச்சார்.

வருத்தம் தெரிவிக்கிறதுக்கும், மன்னிப்புக் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அளவுக்கு முட்டாள்களா நாம். ரஜினி ஒரு அரசியல்வாதியல்ல. அவரும் மனிதர்தானே... இங்கே தமிழ்நாட்டில் தமிழர்களோடு வசிக்கிற ஒரு தமிழ் நடிகரை எதற்காக இப்படி அவமானப்படுத்த வேண்டும்.

குசேலன் திரைப்படத்துக்கு வந்த பிரச்சனையை தமிழினினத்துக்கே வந்த சோதனையாகத்தான் நான் பார்க்கிறேன். அதை நாமெல்லோரும் முன்வந்து தீர்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் ரஜினி, தனி மனிதராகவே நின்று அதைத் தீர்த்த விதத்தைப் பாராட்டுகிறேன். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை.

யாரையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதற்குப் பெயர் பகுத்தறிவுமல்ல என்றார்.

அமீர்:

எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்து, கண்மூடித்தனமாகப் பேசுவதில் நம்மவர்களுக்கு இணையே இல்லை.

ரஜினி அதிகம் சம்பளம் வாங்குகிறார், தமிழர்கள் பணமெல்லாம் அவருக்குப் போகிறது என்று புலம்புகிறார்கள் சிலர். ரஜினி அதிகம் சம்பளம் வாங்குகிறார் என்றால், அதைக் கொடுக்கும் அளவுக்கு அவர் மூலம் தமிழர்களாகிய நாம் சம்பாதிக்கிறோம் என்றுதானே அர்த்தம். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்காகவே சொந்தப்படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டவர் ரஜினி.

அவரைச் சுற்றியுள்ள தமிழர்கள்தானே அவரை வைத்துச் சம்பாதிக்கிறார்கள். ஒரு ரஜினி படம் வருகிறதென்றால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் புதுவாழ்வு கிடைக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒருவர், தன் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் ரசிகர்களுக்காகப் பேசியதை மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்று கூறி, அதில் பப்ளிசிட்டி தேடுவது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

ரஜினி இந்த மண்ணின் மைந்தர் - பி. வாசு

நான் பல வருடங்கள் ரஜினியுடன் நெருங்கிப் பழகியவன். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஒரு அவமானமென்றால் முதலில் நின்று குரல் கொடுக்கக் கூடிய மனம் படைத்தவர் ரஜினி. எண்ணத்தால் முழுக்க முழுக்க தமிழராகவே வாழும் அவரைப் பார்த்து எழுப்பப்படும் எந்தக் கத்தல்களும் எடுபடாமலேயே போகும்.

நாமெல்லோரும் சேர்ந்து போராடித் தீர்த்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை தனிமனிதராகத் தீர்த்து வைத்திருக்கும் அவரைக் குறை சொல்லிக் கஷ்டப்படுத்துபவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்.

என்னுடைய பணக்காரன் படத்தில் அவருக்கு ஒரு வசனம் வைத்திருப்பேன். 'இனி வாழ்வோ சாவோ, எனக்குப் பிடிச்ச இந்த மண்லதான் அது நடக்கணும். அதனால ரிட்டர்ன் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு'. அது சினிமாவுக்காக வைத்த டயலாக் அல்ல.. ரஜினியின் மனதைப் படித்ததால் வைத்தது, என்றார்.

தென்னிந்திய பிலிம்சேம்பர் தலைவர் கேஆர்ஜி, கலைப்புலி தாணு, வினியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Source: ThatsTamil

Friday, August 1, 2008

Superstar didn't apologize to anybody!

Superstar Rajinikanth hasn't apologized as some "so-called" tamil actors/politicians claim. Please take few mins to go through the actual interview which he has given. Hope this would help clear the air!




" புலி விழுந்தா எலி ஹெலிகாப்டர் ஓட்டுமாம் " -- இப்பொழுது இது தான் நடக்கிறது நடிகர் ரஜினி பற்றியும்.

ரஜினிகாந்திற்கு பணம் ஒரு புரட்டு அல்ல. பாபா பட தோல்வியின் பொழுது பணத்தை திருப்பி தந்தவர் தான் இவர் - நியாபகம் இருக்கட்டும்!! இவரை நம்பி படம் எடுப்பவர்கள் எந்த விதத்திலும் நஷ்டம் அடைய கூடாது என்று கருதுபவர் தான் இந்த ரஜினிகாந்த்.

இப்போழுதும் தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் தான் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் மற்றபடி அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

Rajinikanth said he “bows” his head before good people but would not apologise to “goondas”. He insisted that he had not spoken against Kannada activists but against people who used violence to achieve their ends. [Source - IBNLIVE ]

ரஜினிகாந்த் பற்றி குறை கூறும் ரசிகரா நீங்கள்?

உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு;
உங்களை எல்லாம் நம்பி ஒரு தொலைக்காட்சி பேட்டியே குடுக்க முடியவில்லையே!!
உங்களை எல்லாம் நம்பி அவர் எப்படி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைகிறீர்கள்???

சரத் குமார், சத்யராஜ் போன்ற அறை குறையாய் தெரிந்து கொண்டு குதிக்கும் "பெரிய" மனிதர்களே!!

ரஜினிகாந்த் பேசினாலும் குற்றம்;
ரஜின்காந்த் பேசா விட்டாலும் குற்றம்;

அவர் பெயரை எப்படியாவது பயன் படுத்தி உங்கள் பெயர் மற்றவர்களுக்கு நீங்கள் இன்னும் நடித்து கொண்டு தான் இருக்குறீர்கள் என்று தெரிய படுத்த வேண்டும் இல்லையா? பாவம் நீங்களும் என்ன தான் செய்வீர்கள் நீங்கள் நடித்தால் தான் படம் ஓடுவதில்லையே!!!!!

Updated on Aug 4th 2008: [Extract from Rajinifans.com]

மகாபாரதத்தில் கர்ணணை நேருக்கு நேர் நின்று வெற்றி கொள்ள முடியாத அவருடைய எதிரிகள் அவரை இழிவு படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு முறையும் கர்ணணை தேரோட்டி மகன் என்று சொல்லியும், அவருடைய ஜாதியை சொல்லியும் அவருடைய மனதை புண் படுத்தி வெற்றி கொள்ள நினைத்தனர் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை கடைசியில் கர்ணன் விட்டு கொடுத்ததால் மட்டுமே அவர் தோற்றார்..

இங்கே ரஜினி ஒரு கர்நாடகன் என்ற‌ செய்தி ஒவ்வொரு முறை வரும்போதும் இது கர்ணனை வெற்றிகொள்ள அவருடைய எதிரிகள் செய்த சூழ்ச்சியை போலவே உள்ளது... இன்று மிகச்சரியாக ரஜினி அவர்கள் தெளிவு படுத்தி விட்டார் "ஒக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முயலும் புல்லுறுவிகளை உதைக்க வேண்டாமா என்றுதான் சொன்னேன்.." என்று.. இதை அவர் சொல்லாவிட்டாலும் ஆறறிவு கொண்ட அனைவருக்கும் புரியும்.. கமல் அவர்களும் இப்படியெல்லாம் பின் நாளில் ஏதாவது பிரச்சினை வரும் என்றுதான் அன்றே அதே மேடையில் "இங்கிருந்து செய்திகளை சேகரிக்க வந்திருக்கும் உளவாளிகள் தயவு அங்கே சென்று செய்திகளை திரித்து சொல்லாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்.. ஆனாலும் புல்லுறுவிகள் செய்திகளை திரித்து சொல்வதே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.. 17 பிரிண்ட்டுகள் ஓட வேண்டும் என்பதற்க்காக மன்னிப்பு கேட்க ரஜினி என்ன முட்டாளா..? வீரத்திற்க்கு ஏது ஜாதி..? கலைக்கு ஏது மொழி..? சிந்திப்பீர்...