Friday, March 13, 2009

[Tamil Poem] - Power of giving/donating

பெண்களை மட்டுமே நோக்கும்
உன் கண்களை
தானம் கொடு!

அந்தஸ்த்தைக் காட்ட ஆடம்பரம் செய்து
மீதமாக்குவதை விட உணவை
தானம் கொடு!!!

ரத்தத்தைச் சொட்டிக் 'காதல் காவியம்' எழுதுவதைவிட
உன் ரத்தத்தை
தானம் கொடு!!

அன்பாய், பண்பாய், உண்மையாய்
பழகுபவர்களுக்கு
உன் மெல்லிய மனதை
தானம் கொடு!!!

உன் கணவணுக்கோ / மனைவிக்கோ
உண்மையான கற்பை
தானம் கொடு!!!!

உன் மகிழ்ச்சிக்குத் தங்கள் வாழ்கையை
தியாகம் செய்த
உன் பெற்றொருக்கு
சில நிமிடங்கலாவது
தானம் கொடு

இவற்றுள் முக்கியம்
இவற்றில் எவற்றையும்
விளம்பரப்டுத்தாமல்
ரசித்து செய்