Wednesday, April 9, 2008

சத்யராஜின் பொது அறிவு!!

நடிகர் சத்யராஜ் சில தினங்களுக்கு முன் நடந்த உண்ணாவிரதத்தில் திரையுலக Superstar நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல கோடி மக்கள் கும்பிடும் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளை தமிழர்கள் கும்பிட கூடாது என்று கூறி இருக்கிறார்!!

தமிழ் கடவுள் பலர் இருக்க ராகவேந்திர சுவாமிகளை ஏன் கும்பிடுகிறாய் என்று கேட்டுள்ள 'மரத்தமிழன்' சத்யராஜ் அவர்களே கடவுளை கூட உங்கள் மொழி வெறி விட்டுவிடவில்லையா? ஜாதி வெறி , மொழி வெறி, மத வெறி ஒரு நாட்டையே அழிக்கும் பலம் உள்ளது! நாம் எல்லாம் மனிதர்கள் என்ற ஒரே பிரிவில் இருப்போம்; சில நாயை போல ஜாதி/மொழி/மத 'வெறி' பிடித்து அலைய வேண்டாம்.

படித்தவை:



  • வேங்கன்ன (பிறகு ராகவேந்திர சுவாமில்) பிறந்தது 1595 வருடம். பிறந்த இடம் புவனகிரி, காஞ்சிபுரம் அருகில் (தற்போது தமிழ்நாடு). -- http://en.wikipedia.org/wiki/Raghavendra_Swami


  • நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல மனிதர்கள் கும்பிடும் மற்றொரு கடவுள் மகா அவதார் பாபாஜி அவர்கள் பிறந்த இடம் பரங்கிபேட்டை, தமிழ்நாடு. -- http://en.wikipedia.org/wiki/Mahavatar_Babaji


இதில் இருந்து நான் அறிவது சத்யராஜின் ஒரே நோக்கம் ரஜினிகாந்தை எப்படியாவது குறை சொல்லவேண்டும் அல்லது மட்டம் தட்டவேண்டும் என்பதே :)

ஒரு பொது மேடையில் பேசுவதற்கு முன், அதுவும் எட்டு கோடி தமிழர்களின் மனதில் இருக்கும் ஒருவரை பற்றி குறை சொல்லுவதற்கு மும் கொஞ்சம் படித்து பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாத சத்யராஜ் அவர்களை நினைத்து நினைத்து சிரிக்க தான் தோன்றுகிறது :)

நான் தமிழன் என்று மார் தட்டிகொள்ளும் சத்யராஜ் அவர்களே உங்களுடைய தலைவர் M.G.R என்ன தமிழன? அவர் ஒரு கேரள மாநிலத்தவர் தானே? (http://en.wikipedia.org/wiki/M._G._Ramachandran). ஆக உங்களுக்கு பிடித்தவர் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டும் என்றாலும் வந்து இங்கே பிழைக்கலாம் ஆனால் ரஜினிகாந்த் அதையே செய்தால் அவரை நீங்கள் குறை சொல்லுவீர்களோ?

கடவுள் நம்பிக்கை இல்லை, மூடநம்பிக்கை இல்லை என்று எல்லா இடங்களிலும் சொல்லும் சத்யராஜுக்கு மூடநம்பிக்கை உண்டு!!!

Though he claims to be an atheist he is a firm believer in
numerology, Which is why when his residence door no was allotted 13 (under the
new numbering system in year 2000) he immediately changed it to 13A, considering
13 as unlucky. (
source - http://en.wikipedia.org/wiki/Sathyaraj).

சத்யராஜ் அவர்களே,

ரஜினிகாந்த் என்றால் ஆன்மிகம்,
ரஜினிகாந்த் என்றால் எளிமை,
ரஜினிகாந்த் என்றால் பகட்டை விரும்பாதவர்,
ரஜினிகாந்த் என்றால் உள்ளத்தால் உயர்ந்தவர்,
ரஜினிகாந்த் என்றால் ஒரு கை கொடுப்பதை அடுத்த கைக்கு தெரியக்கூடாது என்று நினைப்பவர்,
ரஜினிகாந்த் என்றால் பதவி ஆசை இல்லாதவர்,
ரஜினிகாந்த் என்றால் அவர் இருக்கும் மாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் முன் வந்து குரல் கொடுப்பவர்,
ரஜினிகாந்த் என்றால் தேசத்தை தாண்டி பல மனங்களை கவர்ந்தவர்,
ரஜினிகாந்த் என்றால் ரசிகர்களை கட்டு கோப்பாக வைத்திருப்பவர்,
ரஜினிகாந்த் என்றால் சிகரம்,
ரஜினிகாந்த் என்றால் எதிரியையும் மன்னிக்கும் குணம் படைத்தவர்.

இவற்றில் எதாவது ஒரு நல்ல குணமாவது நம்மிடம் உள்ளதா என்று முதலில் சிந்தித்து பார் அவரை கண்டு பொறாமை படுவதற்கு முன்.

ரஜினிகாந்திற்கு கூட்டம் அலை மோதுகிறது என்றால் சும்மா இல்லை அதற்கு பின்னால் அவருடைய பல வருட உழைப்பு இருக்கிறது. பொறாமை படுவதை விட்டுவிட்டு மக்கள் மனதில் இடம் பிடிக்க வேறு நல்ல வழியை பார்!!!

4 comments:

Anonymous said...

Excellent posting with beatiful explanation on who is Rajinikanth. Hats off to you friend.

Hari Baskar J said...

Vadivel'sarasiyal entry

Vadivel said...

Time pass'uku oru entry potta ... neenga en pozhaipeye galli panniduveenga polla :)

Sivakasi Mahesh said...

Not only Sathyaraj, few others in Tamil Cini Industry will always criticize our Thalaivar. Eventhough they are speaking against him, Thalaivar never took the revenge at any occassions. He spoke only the positive points of those people (best example Manorama & BharathiRaja).