Thursday, December 25, 2008

[Tamil Poem] - தீவிரவாதம் ...

இந்தியா: பாக் ஒரு தீவிரவாத நாடு என்கிறது
பாக்: இந்தியா ஒரு தீவிரவாத நாடு என்கிறது

கடவுளே!
என்னைப் போன்ற பாமரனுக்குத்
தீவிரவாதத்தின் நிறம்
காவியா? பச்சையா?
தெரியவில்லை

ஆனால், அப்பாவி மக்கள்
சிந்தும் இரத்தத்தின்
நிறம் சிவப்பு
என்பது நன்றாகத் தெரிகின்றது

உங்களுக்கு இன்னுமா அது புரியவில்லை?
காவியா அல்லது பச்சையா என்பதை பிறகு பார்போம்
முதலில் இனி உலக வரைபடத்தில் சிவப்புச் சாயம்
பூசப்படாமல் தடுத்து நிறுத்துங்கள்!!

[Tamil Poem] - இழி நிலை

மும்பை நகரில் 26/11 அன்று
நம்முயிர் காக்க
தன்னுயிர் ஈந்த
வீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்!

புத்தாண்டில் உறுதி எற்போம்
இனி நம் வீரர்களை வீணாய்
தீவிரவாததிற்க்கு இழக்கமாட்டோம் என்று!!!

எல்லை கடந்து நிலவைத் தொட முடிந்த நம்மால்
நிச்சயம் நம் எல்லைக் கோட்டையும் காக்க முடியும்
என்று நாம் மட்டும் அறிந்த இரகசியத்தை
இப்புவி அறியச் செய்வோம்!!

ஒரு நிமிடம் சிந்திபோம்........

வேட நாயகன் பிறந்த நாளை நினைக்கும் நமக்கு
வேள்வி நாயகன் பிறந்த நாள் நினைவில் இல்லையே!!!

[ரஜினிகாந்த்: Dec 12 - மகாகவி பாரதியார்: Dec 11]

காந்தியின் பிறந்த நாளில்
மதுக்கடை விடுமுறை
பணமிருந்தும் கிடைக்கவில்லை
காந்தியை நினைக்கிறான்
இந்தியக் குடிமகன்

இது போன்ற இழி நிலை மாறி
நம் தாய் நாட்டிற்க்காக உயிர் நீத்த
தியாகிகளை
வரும் காலங்களில்
மறவாமல் இருப்போம்!