Thursday, August 14, 2008

[Tamil Poem] ஜாதி....

தந்தையுடன் பச்சிளம் குழந்தை
பள்ளிக்குச் சென்றது சேர்வதற்காக

விண்ணப்பப் படிவம் கொடுக்கப் பட்டது
அதில் கேட்டிருந்த ஒரு கேள்வி 'உன் ஜாதி?'
தந்தை ஏதோ எழுத
புரியாமல் விழித்தது இந்த பிஞ்சு!
குழந்தை நினைத்தது 'ஜாதிக்' கேற்றபடி பாடங்கள் மாறுமென்று!!!

முதல் நாள் வகுப்பில்
ஆசிரியர் நடத்திய பாடம்
'ஜாதிகள் இல்லையடி பாப்பா ......'
பிஞ்சு மனம் இன்னும் குழம்பியது
இல்லாத ஜாதியை ஏன் நம்மிடம் கேட்டார்கள் முன்பு?

அந்த குழதையின் முதல் கேள்வி
'ஜாதி' கேற்றபடி பாடங்கள் மாறப் போவதில்லை
'ஜாதி' கேற்றபடி சொல்லிக் கொடுக்கும் ஒழுக்கங்கள் மாறப் போவதில்லை
பிறகு எதற்கு அந்த 'ஜாதி' நமக்கு?

குழம்பிய குழந்தை தெளிவாகச் சிந்திக்கிறது!
ஆனால் தெளிவாக இருப்பதாக கருதும் நாமோ ஜாதி வெறி பிடித்து அலைகிறோம்!!

தயவு செய்து,
ஜாதியை ஒழிப்போம்
இந்தியாவை மீட்போம்!

3 comments:

Sesh said...

Sindhaniyai thoonda cheidhadhu ayya thangaladhu kavidhai.. nandri :)

Saga said...

Nice to read Tamil lines..

Keep going dude...


Saga

Anonymous said...

கேடுகெட்ட சீரிழந்த கீழ்த்தரமான அரசியல்வாதிகளை ஒழித்துக் களையெடுத்தால், இந்த சிக்கல்கள் தானாகவே விடுபட்டுவிடும்.