Wednesday, September 3, 2008

Is being child-less a sin?

நண்பன் ஒருவன் பல வருடங்கள் காதலித்து பின்பு பெற்றோர் சம்மததுடன்
கல்யாணம் செய்து கொண்டான்.

மாதங்கள் கடந்தன ஆனால் அவன் மனைவி கருவுறவில்லை. கேட்கவாவேண்டும் இந்த சமூகத்தை; விசாரிப்பது போலும், அறிவுரை கூறுவது போலும் பலவாறு தர்ம சங்கடங்களை தெரிந்தோ தெரியாமலோ கொடுக்க துவங்கினார்

நண்பனும் அவன் மனைவியும் மனதுக்குள் வருந்தினாலும் வெளியில் காண்பித்து கொள்ளவில்லை.

இப்படியாக நாட்கள் நகர்ந்தன. என் நண்பனுக்கு கிரிக்கெட் விளையாடும் பழக்கம் உண்டு. அப்படி ஒரு முறை IDBI மைதானத்தில் விளையாடி கொண்டிற்கும் பொழுது அவனுடைய ஒரு நண்பனுக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு சந்தோஷம் அடைந்தான்

அன்றே விளையாடிவிட்டு அவன் நண்பன் வீட்டிற்கு சென்றான் வாழ்த்து தெரிவிக்க. அங்கே காத்திருந்தது அவனுக்கு அதிர்ச்சி!

குழந்தையை பார்த்துவிட்டு வெளியில் வந்த அவனை சிவந்த கண்களுடன் வரவேற்றார் நண்பனின் தாய்.

அவள் கேட்ட முதல் கேள்வி 'நீ எங்கே வந்தாய் இங்கு ?' நண்பனுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று!

அவர்கள் அடுத்து 'உனக்கு தான் குழந்தை இல்லை என்று ஆகி விட்டதே இவன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம் ?' என்றார்கள். இவனுக்கு ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கியது ஏன் ஏனென்றால் அவர்கள் பேசி கொண்டிருந்தது வீட்டின் வெளிப்புறம். சாலையில் பலர் இவர்களை பார்த்துகொண்டிருந்தார்கள். மற்றொரு பக்கம் நாம் அந்த குழந்தைக்கு எந்த கெடுத்தலும் நினைக்கவில்லையே பின்பு ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று புரியாமல் விழித்து கொண்டிருந்தான்.

அவர்களோ திட்டுவதை நிறுத்துவதாக இல்லை இவனுக்கு பாதி கோபம் பாதி அழுகையாக அந்த இடத்தை விட்டு வேகமாக கிளம்பினான்.

சில மாதங்களுக்கு பின்னால் அவன் கேள்வி பட்ட விஷயம் அவனை உயிருடன் கொன்றது. அந்த குழந்தைக்கு பிறப்பிலேயே ஏதோ ஊனம் ஏற்பட்டு இருக்கிறது. இறைவா இது என்ன புது சோதனை என்று வருந்திய அவன் போன முறை அவன் நண்பனின் தாய் கத்தியதால் அந்த வீட்டின் பக்கம் போக வில்லை இம்முறை.

விதி அவனை விட்டு வைக்கவில்லை. அவனுடைய நண்பன் சில சொந்தகாரர்களுடன் வந்து இவனை அதே IDBI மைதானத்தில் உருட்டு கட்டையால் அடித்துவிட்டு இவனால் தான் அவன் குழந்தைக்கு ஊனம் ஏற்பட்டது என்று திட்டிவிட்டு போனான்.

குழந்தைக்கு எதனால் அப்படி ஆனது என்று சொல்லும் அளவுக்கு என் நண்பன் ஒன்றும் மருத்துவர் இல்லை! ஆனாலும் இதற்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மட்டும் உறுதியாக சொன்னான் அவனை நம்பும் நண்பர்களிடம்!!!

"இனி
தாங்குவதற்கு நெஞ்சில் உரமும் இல்லை
அழுவதற்கு கண்ணில் கண்ணீரும் இல்லை! "

அங்கு நடந்தவை எதுவும் இன்று வரை என் நண்பன் அவன் மனைவியிடம் சொல்லவில்லை.

இதுவரை பெண்களை தான் கிண்டல் செய்வார்கள் பாவம் என்று நினைத்திருந்த என் நண்பன் இந்த சம்பவத்திற்கு பின்னால் அவன் மனைவியை நினைத்து மிகவும் வேதனை அடைந்தான். ஆம் ஒரு ஆடவனுக்கே இந்த நிலை என்றால் பாவம் பெண்கள் இந்த சமூகம் அவர்களை என்ன பாடு படுத்தும்.

நண்பர்களே,
குழந்தையின்மை என்பது
ஓர் குறைபாடே அன்றி
குற்றமில்லை!!

அன்றில் இருந்து இன்று வரை என் நண்பன் இது வரை அவன் நண்பர்கள் கல்யாணத்திற்கு மற்றும் வளைகாப்பு போன்ற விழாக்களில் கலந்து கொள்வது கிடையாது. ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அதில் இருந்து விலகியே இருக்கிறான் எதற்கு வம்பென்று! கடந்தாண்டு மட்டும் ஒரு நண்பனின் கல்யாணத்திற்காக மதுரை சென்று வந்தான். அந்த மதுரைகார நண்பன் ஒரு கிருத்துவன் அவனுக்கு இதில் நம்பிக்கை இருக்காது என்று இவனாக நினைத்து கொண்டதால் !!

4 comments:

Anonymous said...

Vadivel, I believe I know this suffered person[sadly :-()]. U introduced him to me during my initial days in Tidel Park.
I'm now shocked aftr hearing frm u that he was hit by these "ANIMALS" (am not an expert in English, so didn't know hw to name these stupid so called "FRIEND")
Itz unfortunate to read this blog and am deeply hurt :-(
Hope BABA gives him enough mental strength. Tell him nobody in the world blessed with everything, there are UPs and DOWNs in life and thatz the way we sail our ship in these troubled water. Convey him on behalf of me, "forget the wounds and just move ahead with the trustworthy creatures given by GOD"
!!! GOD BLESS HIM !!! and my prayer includes him always.
Last but not least -
am feeling even more bad/hurt of myself, when ur frnd avoided to attend a good function at my place and despite of my calling he didn't pay a single visit to see my amma/pappa at home. I was in an assumption he cldn't make it up due to off activities, but nw realise it why. (perhaps am still a distant person honestly frm his heart). Itz hard to digest that he included me also in such group :-(. But I respect his feelings and will not ask anything anymore.

Sivakasi Mahesh said...

உலக மக்கள் சொல்வதையும், பாவப்படுவதையும் குறித்து உங்கள் நண்பன் வருந்த வேண்டாம். ஆணும் பெணும் முடிவு செய்து வருவதோ (அல்லது) மருத்துவர்கள் செய்கின்ற நவீன சிகீச்சை மூலமாக வருவதோ அல்ல, பிள்ளைகள். கடவுளிடம் இருந்து வருவது.
கடவுள் அனுமதி இல்லாமல் ஒரு அணுவும் இந்த உலகில் அசையாது இருக்கையில், கருவும் அப்படியே.

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம்: 127:4

இது என்னுடைய வாழ்க்கையில் நான் கண்டு கொண்ட (கடவுள் கற்றுக்கொடுத்த) பெரிய உண்மை.

உங்கள் நண்பனின் நம்பிக்கை இனி கடவுள் மீது மட்டுமே இருப்பதாக

உங்கள் (நண்பனின்) துக்கம் சந்தோஷமாக மாறும் !!!

Anonymous said...

Hmm.. I know your friend who attended My wedding with family & they were as part of My Family.
Why should your friends listen to other non-worthy comments? Hope your friend's friend family members are uneducated. These words doesn't come from a educated & grown up in good society.
Today -> Present. Tell your friend to just rock the present[gift] with god. Ask him to keep the burden on to Jesus as he cares for him. I want to share so many suggesstions/ideas with your friend, but i don't think so how he'll react in this matter or i used to say myself am i worthy to do so. On seeing him i know he is so reserved in this matter.
I've twins, but god didn't allow one of my kid not even to scroll / Sit till this time [1.5 Yrs old]. My parents used to do blood tears & they don't allow my kid to lie down while the other go around. I know God has certain plan, let's wait on him to get the result. Tell him "Don't Worry".
FYI:One of the famous prieacher of Christianity in TamilNadu[South] Mohan C. Lazarus of Jesus Redeems Ministry, doesn't have Kid. But god has made all the people as his Children..
"Don't Worry" - will be my word to him. I'm sorry for those innocent persons who spoke on your friend. May god bless them and advice them how to take care of others..

Anonymous said...

The world is not filled with people of one kind. If one can just take time to sift the real from the chaff then life will be worth every second in gold. "to each his own" is a wise way of looking at the world.
If one can surround oneself with genuine people then life would be that much easier.
It is not right to carry on in life isolating from every thing and every one. One can miss out on real people and the joy of having and enjoying true friendships.

Friendship as is common knowledge is one of the last few undemanding things left in this world and sometimes it may surprise one from unlikely places.

I wish your friend the best of luck in finding such true people.

It also pays to ignore what one knows is false and holds no meaning. Words may wound. But one is wounded only to the extent one allows one to be.

As Tom Hanks says in a movie, "Who knows what the tide will bring in tomorrow." It may be a great surprise.